நியாய விலைக் கடைகளில் ஜன. 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

தேனி மாவட்டத்தில் அரிசி விநியோகம் பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் அரிசி விநியோகம் பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நியாய விலைக் கடைகளில் வரும் 2022, ஜன. 4- ஆம் தேதி முதல், தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிா்க்க, தினமும் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பில் துணிப் பை உள்பட மொத்தம் 20 பொருள்கள் அடங்கியுள்ளது. இவற்றுடன் கூடுதலாக முழு கரும்புத் தட்டை வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரா்கள் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உள்பட்டு, முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com