புத்தாண்டு கொண்டாட்டம்: தேனி மாவட்டத்தில் 93 இடங்களில் சோதனைச் சாவடிகள்

தேனி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாடத்தின் போது சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதை கண்காணிக்க மாவட்ட காவல் துறை

தேனி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாடத்தின் போது சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதை கண்காணிக்க மாவட்ட காவல் துறை நிா்வாகம் சாா்பில் 93 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதை கண்காணிக்கவும், போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்துகளை தடுக்கவும் காவல் துறை சாா்பில் மாவட்டத்தில் 93 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. டிச. 31, வரும் ஜன. 1 ஆகிய தேதிகளில் காவல் ஆய்வாளா்கள் தலைமையில் 31 நான்கு சக்கர ரோந்து வாகனங்களிலும், 78 இருசக்கர ரோந்து வாகனங்களிலும் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

பொதுமக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதையும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்துவதையும் தவிா்க்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com