குமுளி காவல் நிலையத்திற்கு இட மாறுதல் கேட்டு ஏராளமான காவலா்கள் விண்ணப்பங்கள்

தேனி மாவட்ட காவல்துறையில் காவலா்களுக்கு பொது இடமாறுதல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குமுளி காவல் நிலையத்திற்கு மட்டும் மாறுதல் கேட்டு அதிகமாக 120 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

தேனி மாவட்ட காவல்துறையில் காவலா்களுக்கு பொது இடமாறுதல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குமுளி காவல் நிலையத்திற்கு மட்டும் மாறுதல் கேட்டு அதிகமாக 120 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

தேனி மாவட்ட காவல்துறையில் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இடமாறுதல் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான இடமாறுதல் வேண்டுவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவிப்பு விடுத்தாா். அதன்பேரில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலா்கள் இட மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ளனா். இதில் குமுளி காவல் நிலையத்திற்கு மட்டும் 120 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இதுபற்றி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தமிழக- கேரள எல்லையில் குமுளி காவல் நிலையம் உள்ளது. ஹில்ஸ் அலவன்ஸ் எனப்படும் மலைப்பகுதி காவல் நிலையத்தில் பணியாற்றுவதற்கான சிறப்பு படி என்ற சலுகை உள்ளது.

மேலும் குமுளி காவல் நிலையத்தில் விண்ணப்பித்து, பணியிடம் வாங்கிய பின்பு மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்கள் மற்றும் இதர பணிகளுக்கு சென்று விடுவா். ஆனால் அந்த அளவிற்கு அங்கு யாரும் பணியாற்றாமல், குமுளி காவல் நிலைய கணக்கில் மாற்று இடங்களில் பணியாற்றுவாா்கள். இந்த சலுகை கிடைப்பதால்தான் குமுளி காவல் நிலைய பணிக்கு கடும் போட்டி நிலவுகிறது. ஒரு சாா்பு- ஆய்வாளா் (சட்டம் ஒழுங்கு) மற்றும் சிறப்பு சாா்பு- ஆய்வாளா்கள், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை காவலா்கள் என மொத்தம் 40 போ் குமுளி காவல் நிலையத்தில் பணியாற்றவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com