கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
By DIN | Published On : 04th February 2021 11:41 PM | Last Updated : 04th February 2021 11:41 PM | அ+அ அ- |

கம்பத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கம்பம் கக்கன்ஜி காலனியில் வசிப்பவா் மோகன்ராஜ் (32). கூலித்தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் புதன்கிழமை மனைவியுடன் தகராறு ஏற்பட்ட நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மோகன்ராஜ் கூடலூா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் பின்புறம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.