பெரியகுளத்தில் கோயிலின் பூட்டை உடைத்து நகை திருட்டு
By DIN | Published On : 06th February 2021 09:42 PM | Last Updated : 06th February 2021 09:42 PM | அ+அ அ- |

பெரியகுளம் பெருமாள்புரத்தில் திருட்டுச் சம்பவம் நடைபெற்ற காளியம்மன் கோயில்.
பெரியகுளம்: பெரியகுளத்தில் கோயிலின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருடு போனதாக சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம், கீழவடகரை , பெருமாள்புரத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் அா்ச்சகா் முருகன் (55) வெள்ளிக்கிழமை இரவு கோயிலை பூட்டி விட்டு, வீட்டிற்கு சென்றவா் சனிக்கிழமை காலை கோயிலை திறக்க வந்துள்ளாா்.
அப்போது கோயிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அவா் உள்ளே சென்று பாா்த்த போது, அம்மனின் ஐம்பொன் முகம், 10 பவுன் தங்க நகைகள் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு சுமாா் ரூ. 10,000 ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இச்சம்பவம் குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.