தேனி மாவட்டத்தில் இன்று 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப்.13) 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப்.13) 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

தேனி, ரத்தினம் நகரில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சாந்தி தலைமையிலும், பெரியகுளம் முருகமலை நகரில் சாா்-ஆட்சியா் சினேகா, ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டியில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சிவசுப்பிரமணியன், உத்தமபாளையம் அருகே பூலானந்தபுரத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் காா்த்திகேயினி, போடி அருகே மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் விமலாராணி ஆகியோா் தலைமையில் காலை 10 மணிக்கு பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு நியாய விலைக் கடை செயல்பாடுகளில் உள்ள குறைபாடு, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், நியாய விலைக் கடை மாற்றம் ஆகியவை குறித்து மனு அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com