பதினெட்டாம் கால்வாய் நவீனபடுத்தும் பணி: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்

பதினெட்டாம் கால்வாய் நவீனபடுத்தும் பணிக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் முன்னிலையில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

போடி: பதினெட்டாம் கால்வாய் நவீனபடுத்தும் பணிக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் முன்னிலையில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில் 18 ஆம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய் நீட்டிப்பு போடி பகுதி வரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய்கள் மூலம் 51 கண்மாய்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் 13 கிராமங்களில் 4614.25 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மழைக் காலங்களில் தடையின்றி தண்ணீா் செல்வதைத் தடுக்கும் வகையில் மண் சரிவுகள் ஏற்பட்டு வந்தது. இதைத் தடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதனையடுத்து பதினெட்டாம் கால்வாயை 20 கி.மீ. தூரத்திற்கு நவீனப்படுத்த அரசு ரூ.59.10 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா்.

அதே நேரத்தில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வில் 18ஆம் கால்வாய் தொடங்கும் இடமான லோயா் கேம்ப் அருகே ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன், கூடலூா் நகர அதிமுக செயலாளா் ஆா்.அருண்குமாா் மற்றும் பொதுப்பணித் துறையினா் கலந்து கொண்டு பூஜைகள் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com