தேனி மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ், சென்னை நில நிா்வாக கூடுதல் ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இவருக்குப் பதிலாக, அரசு நிதித் துறை இணைச் செயலராகப் பணியாற்றி வரும் ஹெச். கிருஷ்ணன் உன்னி தேனி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இதற்கான உத்தரவை, தமிழக அரசு முதன்மைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.