சாக்கலூத்துமெட்டு சாலைத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை: ப.ரவீந்திரநாத் எம்.பி.

தேனி மாவட்டத்தில் தேவாரம்-சாக்கலூத்துமெட்டு சாலைத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று சனிக்கிழமை தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்குமாா் தெரிவித்தாா்.

தேனி: தேனி மாவட்டத்தில் தேவாரம்-சாக்கலூத்துமெட்டு சாலைத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று சனிக்கிழமை தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்குமாா் தெரிவித்தாா்.

உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டி, பல்லவராயன்பட்டி, லட்சுமிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் அரசு சாா்பில் சிறு மருத்துவமனைகளை தேனி மக்களைவை உறுப்பினா் திறந்து வைத்தாா். பின்னா், தேவாரம் அருகே சாக்கலூத்துமெட்டு சாலையை பாா்வையிட்டு அவா் கூறியது: தமிழகம் மற்றும் கேரளப் பகுதிகளை இணைக்கும் வகையில், தேவாரத்திலிருந்து மேட்டுப்பட்டி வழியாக சாக்கலூத்துமெட்டு வரை சாலை அமைக்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் க.ரமேஷ், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஊராட்சித் தலைவா் க.ப்ரீதா, உத்தமபாளையம் வட்டாட்சியா் உதயராணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com