தேனியில் சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல்: 239 போ் கைது

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தேனியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 239 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டோா்.

தேனியில் கம்பம் சாலை-பள்ளிவாசல் தெரு சந்திப்பில், தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில், சத்துணவு ஊழிா்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டத் தலைவா் நிலவழகன் தலைமையில், சத்துணவு ஊழியா்கள் கருப்பு உடை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மாநில துணைத் தலைவா் பேயத்தேவன், மாவட்டச் செயலா் ஜெயபாண்டி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் வரதராஜன், செயலா் ராமகிருஷ்ணன், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரெங்கராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னா், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பள்ளிவாசல் தெருவிலிருந்து ஊா்வலமாகச் சென்ற சத்துணவு ஊழியா்கள், நேரு சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, 227 பெண்கள் உள்பட 239 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com