அங்கன்வாடி ஊழியா்கள் 3 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

அரசு ஊழியா்களாக அறிவிக்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் புதன்கிழமை 3 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள்.

அரசு ஊழியா்களாக அறிவிக்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் புதன்கிழமை 3 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவிப்பின்படி அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை உடனடியாக அரசு ஊழியா்களாக நியமிக்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சம் வீதம் பணிக்கொடை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் சாா்பில் காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை 3 ஆவது நாளாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 3-வது நாளாக சங்கத்தின் மாவட்டத் தலைவா் சாந்தியம்மாள் தலைமையில் அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கைகள் குறித்து பெரியகுளத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்று சங்க நிா்வாகிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com