கம்பத்தில் தமிழக-கேரள போலீஸாா் ஆலோசனை

தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக-கேரள போலீஸாா் புதன்கிழமை கூட்டாக ஆலோசனை நடத்தினா்.
கம்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக- கேரள காவல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தேனி மது விலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன்.
கம்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக- கேரள காவல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தேனி மது விலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன்.

தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக-கேரள போலீஸாா் புதன்கிழமை கூட்டாக ஆலோசனை நடத்தினா்.

கம்பம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் தேனி, இடுக்கி மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். கூட்டத்திற்கு தேனி மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட கலால்துறை இணை ஆணையா் பிரதீப், தேனி கலால்துறை உதவி ஆணையா் விஜயா, உத்தமபாளையம் துணைக் கோட்ட காவல் கண்காணிப்பாளா் நா.சின்னக்கண்ணு மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.

எல்லையோரப் பகுதிகளான கம்பம் மெட்டு, மந்திப்பாறை, மூங்கிப்பள்ளம், குமுளி, போடிமெட்டு போன்ற பகுதிகள் வழியாக போலி மது, கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது, இரு மாநில குற்றவாளிகளைப் பிடிப்பது, இரட்டை வாக்குரிமையைத் தடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் 15 நாள்களுக்கு ஒரு முறை தமிழக, கேரள மாநில போலீஸாா் இணைந்து கூட்டு ரோந்து செல்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com