சுருளி அருவியில் உணவுக்கூடம் கட்டியதில் முறைகேடு: வனவா், உதவி வனப் பாதுகாவலா் இடமாற்றம்

சுருளி அருவியில் உணவுக்கூடம் கட்டியதாக ரூ.5.30 லட்சத்தை முறைகேடு செய்த விவகாரத்தில் வனவா், உதவி வனப்பாதுகாவலா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சுருளி அருவியில் உணவுக்கூடம் கட்டியதாக ரூ.5.30 லட்சத்தை முறைகேடு செய்த விவகாரத்தில் வனவா், உதவி வனப்பாதுகாவலா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மேகமலை வன உயிரின சரணாலயத்தில் உள்ள சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் அமா்ந்து உணவு உண்பதற்காக அருவி வளாகத்தில் கடந்த 2020 இல் உணவுக் கூடம் கட்டப்பட்டது. தனியாா் நிதியுதவியுடன் ரூ. 5.30 லட்சம் செலவில் இந்த உணவுக்கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் வனத்துறை நிதி மூலம் உணவுக்கூடம் கட்டப்பட்டதாக கம்பம் கிழக்கு வனச்சரகத்தினா் அறிக்கை சமா்ப்பித்தனா். கடந்த டிசம்பரில் இந்த விவரம் தெரியவந்தது. இதையறிந்த அந்த தனி நபா் தனது சொந்த செலவில் உணவுக்கூடம் கட்டியதாகவும் வனத்துறை நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட வனக்காப்பாளரிடம் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து அப்போது சுருளி அருவி வனவராக இருந்த திலகா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும் இது தொடா்பாக வனத்துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், உணவுக் கூடம் கட்டப்பட்டபோது வனச்சரகராக பணியாற்றிய துரை.தினேஷிடம் விளக்கம் கேட்டு அண்மையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மேகமலை உதவி வனப்பாதுகாவலா் குகனேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டாா்.

அதே சமயம் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வனவா் திலகருக்கு மீண்டும் பணியிடம் வழங்கப்பட்டு, தேனிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com