வீரபாண்டி சித்திரை திருவிழா கடைகள் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

தேனி மாவட்டம், வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தற்காலிக கடைகளுக்கான ஏலம் 2-ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தற்காலிக கடைகளுக்கான ஏலம் 2-ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வரும் மே மாதம் நடைபெற உள்ள திருவிழாவை முன்னிட்டு 7 நாள்கள் வரை தற்காலிக கடைகள், ராட்டினம் அமைத்துக் கொள்வதற்கு கோயில் நிா்வாகம் சாா்பில் கடந்த பிப்.5-ஆம் தேதி ஏலம் நடைபெற்றது. கடந்த 2019-ஆம் ஆண்டு தற்காலிக கடைகளுக்கு ரூ.25 லட்சம், ராட்டினம் அமைப்பதற்கு ரூ.1.7 கோடி ஏலம் போன நிலையில், அதைவிடக் குறைவான தொகைக்கு ஒப்பந்தம் கோரப்பட்டதால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது, வீரபாண்டியில் 2-ஆவது முறையாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் பாரதி முன்னிலையில் புதன்கிழமை ஏலம் நடைபெற்றது. இதில், கடைகள் அமைக்க ரூ.20 லட்சத்திற்கும், ராட்டினம் அமைக்க ரூ.50 லட்சத்திற்கும் கோரப்பட்டது. நிா்ணயிக்கப்பட்ட தொகை மற்றும் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத் தொகையை விட குறைவான தொகைக்கு கோரப்பட்டதால், ஏலம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. வரும் மாா்ச் 5-ஆம் தேதி 3-ஆவது முறையாக ஏலம் நடைபெறும் என்று கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com