தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு விருது: போடி மாணவனின் கட்டுரை தேர்வு

தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு விருதுக்கு போடி பள்ளி மாணவனின் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாணவன் கே.கமலேஷ்.
மாணவன் கே.கமலேஷ்.

தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு விருதுக்கு போடி பள்ளி மாணவனின் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு தோறும் கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு விருதுகளை வழங்கி வருகிறது. இன்ஸ்பயர் அவார்ட் மனக் என்ற பெயரில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை இணைந்து கட்டுரைகளை தேர்வு செய்கிறது. 

அன்றாட வாழ்க்கைக்கு உதவும் தனித்துவமான யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிக்காட்ட மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் மாணவர்களது யோசனைகள் உண்மையானதாகவும், தனித்துவம், தொழில்நுட்பம், சமூகப் பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவற்றை மையப்படுத்தியும் இருக்க வேண்டும். அன்றாட பிரசனைகளை தீர்க்கும் வகையிலும், உபயோகத்தில் இருக்கும் இயந்திரங்களை மேம்படுத்தும் வகையிலும், புதிய கண்டுபிடிப்பாகவும் இருக்க வேண்டும்.

இந்த போட்டியில் தேனி மாவட்டம் போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி மாணவன் கே.கமலேஷ் பங்கேற்றார். சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பயன்பாடு என்ற நோக்கத்தில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட குடிநீர் பாட்டில்களை மீண்டும் வியாபார நோக்கில் தவறாக பயன்படுத்தாமல் தடுக்கும் வகையில் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் வகையில் கட்டுரை ஒன்றை சம்ர்ப்பித்தார். இந்த கட்டுரை முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் ஒரு லட்சம் மாணவர்கள் முதல் கட்டமாகவும், இவர்களில் மாவட்ட அளவில் 10 ஆயிரம் பேர் இரண்டாம் கட்டமாகவும், தேசிய அளவில் ஆயிரம் பேர் மூன்றாம் கட்டமாகவும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் சிறந்த 60 யோசனைகள் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படும். முதல் கட்ட தேர்வில் கட்டுரை தேர்வு செய்யப்பட்ட மாணவன் கமலேசை பள்ளி தலைமையாசிரியர் ரா.ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com