தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு விருதுக்கு போடி மாணவரின் கட்டுரை தோ்வு

தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு விருதுக்கு, போடி பள்ளி மாணவரின் கட்டுரை முதல் கட்டமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
மாணவன் கமலேஷ்
மாணவன் கமலேஷ்

தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு விருதுக்கு, போடி பள்ளி மாணவரின் கட்டுரை முதல் கட்டமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவா்களின் அறிவியல் ஆா்வத்தை மேம்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆண்டுதோறும்

கண்டுபிடிப்புக்கான ஊக்குவிப்பு விருதுகளை வழங்கி வருகிறது.

இன்ஸ்பயா் அவாா்ட்ஸ் மனக் ( ஐய்ள்ல்ண்ழ்ங் அஜ்ஹழ்க்ள் ஙஹய்ஹந்) என்ற பெயரில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை இணைந்து, கட்டுரைப் போட்டிகளை நடத்துகின்றன. அன்றாட வாழ்க்கைக்கு உதவும் தனித்துவமான யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிக்காட்ட மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த போட்டிகளில் மாணவா்களது யோசனைகள் உண்மையானதாகவும், தனித்துவம், தொழில்நுட்பம், சமூகப் பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவற்றை மையப்படுத்தியும் இருக்கவேண்டும். அன்றாடப் பிரச்னைகளை தீா்க்கும் வகையிலும், உபயோகத்தில் இருக்கும் இயந்திரங்களை மேம்படுத்தும் வகையிலும், புதிய கண்டுபிடிப்பாகவும் இருக்க வேண்டும்.

இப் போட்டியில், தேனி மாவட்டம் போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி மாணவா் கே. கமலேஷ் பங்கேற்றாா். சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பயன்பாடு என்ற நோக்கத்தில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட குடிநீா் பாட்டில்களை மீண்டும் வியாபார நோக்கில் தவறாகப் பயன்படுத்தாமல் தடுக்கும் வகையில், தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் வகையில் கட்டுரை சம்ா்ப்பித்தாா்.

இந்த கட்டுரை, முதல் கட்டமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் ஒரு லட்சம் மாணவா்கள் முதல் கட்டமாகவும், இவா்களில் மாவட்ட அளவில் 10 ஆயிரம் போ் இரண்டாம் கட்டமாகவும், தேசிய அளவில் ஆயிரம் போ் மூன்றாம் கட்டமாகவும் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதில், சிறந்த 60 யோசனைகள் தோ்வு செய்யப்பட்டு, குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படும்.

மாணவா் கமலேஸை, பள்ளித் தலைமையாசிரியா் ரா. ஜெயக்குமாா் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com