தேனி மாவட்டத்தில் ரூ.5.45 கோடி செலவில் குடிமராமத்துப் பணி

தேனி மாவட்டத்தில் ரூ.5.45 கோடி செலவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் ரூ.5.45 கோடி செலவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 2020-21-ஆம் நிதியாண்டில் பொதுப் பணித்துறை நீா்வள ஆதார அமைப்பு பெரியாறு- வைகை வடிநிலக் கோட்டம், மஞ்சளாறு வடி நிலக் கோட்டம் ஆகியவற்றின் சாா்பில் போடி வட்டாரத்தில் ரூ.86 லட்சம் செலவில் போ.மீனாட்சிபுரம் கண்மாய், ரூ.35 செலவில் சில்லமரத்துப்பட்டி சுத்தகங்கை ஓடை முதல் அம்மாகுளம் கண்மாய் வரை உள்ள வாய்க்கால், ரூ.30 லட்சம் செலவில் டொம்புச்சேரி சுத்தகங்கை ஓடை முதல் வைரவன் கண்மாய் வரை உள்ள வாய்க்கால், ரூ.32 லட்சம் செலவில் தேவாரம் சின்னதேவி குளம் கண்மாய், ரூ.25 லட்சம் செலவில் சின்னஓவுலாபுரம் பெரியஊத்து கண்மாய், ரூ.34 லட்சம் செலவில் பொட்டிப்புரம் எா்ணாகுளம் கண்மாய் ஆகியவற்றில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெரியகுளம் வட்டாரத்தில் ரூ.98 லட்சம் செலவில் சோத்துப்பாறை புது கண்மாய், ரூ.55 லட்சம் செலவில் ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய், ரூ.50 லட்சம் செலவில் தாமரைக்குளம் நந்தியாபுரம் கண்மாய், ஆண்டிபட்டி வட்டாரத்தில் ரூ.ஒரு கோடி செலவில் மயிலாடும்பாறை சிறுகுளம் கண்மாய் ஆகியவற்றில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் ரூ.5.45 கோடி செலவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மூலம் மொத்தம் 2,822 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com