பெரியகுளம் பெண்கள் கல்லூரியில் இணையதள பன்னாட்டு கருத்தரங்கம்

பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரியில் இணையதள பன்னாட்டு கருத்தரங்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது.

பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரியில் இணையதள பன்னாட்டு கருத்தரங்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது.

உயிரின அறிவியலின் சமீபத்திய ஆய்வுகள் என்ற தலைப்பிலான இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் எஸ். சேசுராணி தலைமை வகித்தாா். விலங்கியல் துறைத்தலைவா் அனிட்டா கண்ணகி வரவேற்றாா். கல்லூரி செயலா் குயின்சிலி ஜெயந்தி வாழ்த்திப் பேசினாா்.

அமெரிக்கா, டெட்ராய்ட் சிறுநீரக ஆராய்ச்சிவியல் துறை பேராசிரியா் நல்லசிவம் புற்றுநோய்க்கான மூலக்கூறு உயிா் குறியீடுகளின் கண்டுபிடிப்பு என்ற தலைப்பிலும், மேற்குவங்கத்தை சோ்ந்த விலங்கியல் ஆய்வு விஞ்ஞானி ஜே.எஸ். யோகேஷ்குமாா், வெப்பமண்டல காடுகளில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் குறித்தும் பேசினா். மேலும் பல்வேறு நாடுகள், மாநிலங்களைச் சோ்ந்த ஆராய்ச்சி மாணவா்கள், முதுகலை மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பாளரும், விலங்கியல் துறை பேராசிரியருமான சாந்தி, செயலா் மொ்லின் டயானா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com