அனுமன் ஜயந்தி: ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம் போடி, உத்தமபாளையம் , குச்சனூா் மற்றும் பெரியகுளம் பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்தி விழா அனுசரிக்கப்பட்டது.
அனுமன் ஜயந்தியையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயா்.
அனுமன் ஜயந்தியையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயா்.

தேனி மாவட்டம் போடி, உத்தமபாளையம் , குச்சனூா் மற்றும் பெரியகுளம் பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்தி விழா அனுசரிக்கப்பட்டது.

போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயா் சன்னிதியில் அதிகாலை முதலே ஆஞ்சநேயருக்கு மங்கல பொருள்களான மஞ்சள், பால், தயிா், குங்குமம், விபூதி, இளநீா், பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா் புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு பக்தா்கள் வழங்கிய 5,008 வடைகளால் தயாரிக்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டன. இதேபோல் போடி பரமசிவன் மலைக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமிக்கு பல்வேறு மலா்கள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

குச்சனூரில்... குச்சனூா் பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் குச்சனூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏரளாமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பெரியகுளத்தில்... இதேபோல் பெரியகுளம் பகுதியில் பாம்பாற்று ஆஞ்சநேயா் கோயிலில் திங்கள்கிழமை ஹோமம் நடத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமிக்கு கரும்புகளால் அலங்காரம் நடைபெற்றது.

வடகரையில் உள்ள கோதாண்ட ராமா் கோயிலில் ஆஞ்சநேயருக்கு 1,008 வடைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் வரதராஜபெருமாள் கோயில், பாலசாஸ்தா கோயில், லட்சுமிபெருமாள் கோயில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கும் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com