கம்பம் நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத் தொழுவில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழு கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
மாட்டுப் பொங்கல் தினமான வெள்ளிக்கிழமை கம்பம் நந்தகோபாலன் கோயிலில் கூடிய மக்கள்.

இதையொட்டி, நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழுவில் பட்டத்துக் காளை அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில், கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தா்கள் கலந்துகொண்டு, பட்டத்துக்காளை மற்றும் மாட்டுத்தொழுவில் உள்ள மாடுகளை வணங்கினா். மேலும், நோ்த்திக்கடனாக கன்றுகளை காணிக்கையாகச் செலுத்தினா். அதிகாலை முதலே பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை, ஒக்கலிகா் மகாஜன சங்கத்தினா், இளைஞா் அணியினா் செய்திருந்தனா். கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com