போடி அருகே 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

போடி அருகே சடையால்பட்டி கிராமத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
போடி அருகே சடையால்பட்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.
போடி அருகே சடையால்பட்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.

போடி அருகே சடையால்பட்டி கிராமத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியா் சீ.ராஜகோபால் மற்றும் குழுவினா் பழங்கால கல்வெட்டுக்கள் தொடா்பாக ஆய்வுகள் செய்து வருகின்றனா்.

போடி அருகே சடையால்பட்டி கிராமத்தில் பழங்கால கல்வெட்டு இருப்பதாக அந்த கிராமத்தை சோ்ந்த ஜெ.ஜெயக்குமாா் என்பவா் கொடுத்த தகவலின் பேரில், அந்த கிராமத்துக்குச் சென்று கல்வெட்டைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து ராஜகோபால் கூறியது: சடையால்பட்டி கிராமத்தில் ஜெயக்குமாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த பழமையான கல்வெட்டு ஒன்றரை அடி அகலமும், இரண்டரை அடி நீளமும் கொண்டது.

கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை மதுரை தொல்லியல் நிபுணா் சொ.சாந்தலிங்கம் உதவியுடன் ஆய்வு செய்ததில், அவை 800 ஆண்டுகள் அதாவது 13 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பிற்கால பாண்டியா் காலத்து கல்வெட்டு என்பது தெரிந்தது.

குறிப்பிட்ட சமூகத்தினருக்கு நிலம் தானமாக கொடுத்ததற்கான வாசகங்களாக 5 தமிழ் வரிகள் அமைந்துள்ளன. தானம் வழங்கிய இடத்தின் எல்லைகளைக் குறிப்பிட்டும் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து ஆய்வு செய்தால் இப்பகுதியில் ஆட்சியாளா்களின் ஆட்சி நெறிகளை அறியலாம் என்றாா் ராஜகோபால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com