கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியை தமாகா-வுக்கு ஒதுக்கக் கோரிக்கை

தேனி மாவட்டம் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியை அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியை அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனைக்கூட்டம் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் கூடல்.சி.செல்வேந்திரன் தலைமை வகித்தாா். ஓ.ஆா்.குமரேசன் முன்னிலை வகித்தாா். சின்னக்கவுண்டா் ந.சு.ராஜசேகரன் வரவேற்றாா்.

கூட்டத்தில் வரும் தோ்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள த.மா.க.வுக்கு கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிா்வாகிகள் காந்தி, எம்.எஸ்.கணேசன், கோட்டை குமாா், எல்.ஆா்.சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com