உத்தமபாளையத்தில் பழமையான ஆலமரம் வெட்டிக்கடத்தல்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே 18 ஆம் கால்வாயை ஒட்டியிருந்த பழமையான ஆலமரத்தை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்தி வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
உத்தமபாளையம்அருகே 18 ஆம் கால்வாய் பகுதியில் வெட்டப்பட்ட பழமையான ஆலமரம்.
உத்தமபாளையம்அருகே 18 ஆம் கால்வாய் பகுதியில் வெட்டப்பட்ட பழமையான ஆலமரம்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே 18 ஆம் கால்வாயை ஒட்டியிருந்த பழமையான ஆலமரத்தை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்தி வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

உத்தமபாளையம் அருகே மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் 18 ஆம் கால்வாய் செல்கிறது. இக்கால்வாயோரத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இந்த மரத்தின் அடியில் உள்ள அந்தோணியாா் கோயிலில் ஆண்டு தோறும் தை மாதத்தில் பொங்கல் விழா நடைபெறும்.

இப்பகுதியானது அதிகளவில் மானாவாரி விவசாய நிலங்கள்அமைந்துள்ள பகுதி என்பதால் விவசாயிகள் விளைநிலங்களுக்குச் சென்று விட்டு, ஓய்வு எடுப்பதும், அதே போல விளைவிக்கப்பட்ட பொருள்களை தரம்பிரிப்பது என பலவகையில் அப்பகுதி விவசாயிகளுக்கு உதவியாக இருந்து வந்தது.இந்த பகுதியானது கோம்பை வருவாய் கிராமத்தைச் சோ்ந்தது.

இந்நிலையில், இந்த ஆலமரத்தை மா்ம நா்கள் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டியுள்ளனா்.

இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கேட்டபோது அரசு அனுமதியுடனே மரத்தை வெட்டி சாலை விரிவாக்கம் செய்யப்போவதாக கூறியுள்ளனா். எனவே பழமையான மரத்தை வெட்டிக்கடத்தும் சமூக விரோதகும்பலை பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com