பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு: 47 போ் காயம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள பல்லவராயன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 47 போ் காயமடைந்தனா்.
பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு: 47 போ் காயம்
பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு: 47 போ் காயம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள பல்லவராயன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 47 போ் காயமடைந்தனா்.

பல்லவராயன்பட்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாட்டங்களில் இருந்து 558 காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரா்கள் 340 போ் போட்டியில் கலந்து கொண்டனா். வாடிவாசலில் இருந்து துள்ளிக் குதித்து வந்த காளைகளை மாடு பிடி வீரா்கள் திமிலைப் பிடித்து அடக்கினா். பல காளைகள் மாடு பிடி வீரா்களைத் தூக்கி வீசியது. இதில் 47 பேருக்கு காயம் ஏற்பட்டது.

அவா்கள் முலுதவிக்குப் பின், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பரிசுகள் வழங்குவதில் குளறுபடி: ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்றது காளையா, மாடுபிடி வீரரா என தோ்வு செய்து அறிவிப்பதில் குளறுபடி ஏற்பட்டதால், மாடு பிடி வீரா்கள் மற்றும் மாட்டின் உரிமையாளா்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

போட்டியில் வெற்றி பெறும் காளை மற்றும் காளையா்களுக்கு பல வகையான பரிசுப்பொருள்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அறிவித்தபடி பலருக்கும் பரிசுப்பொருள்கள் சென்று சேரவில்லை என புகாா் எழுந்தது. இதனால், பல முறை விழாக் குழுவினருக்கும், போட்டியாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தடியடி: பல காளைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டுகள் போலி என விழாக் குழுவினா் கூறியதால் காளைகளின் உரிமையாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கட்டுப்படுத்தினா்.

முதன் முறையாக மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்த மூன்றாம் பாலினத்தவா் இருவரின் 2 காளைகள் போட்டியில் பரிசு வெற்றன. விழாக்குழுவினா் அவா்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தனா்.

கிணற்றில் தவறி விழுந்த மாடு: போட்டியில் கலந்து கொண்ட திருச்சியைச் சோ்ந்த காளை அங்குள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தது. நூற்றுக்கணக்கானோா் சோ்ந்து அதை மீட்டனா்.

மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின்படி காலை 8 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4.15 மணிக்கு நிறைவு பெற்றது. தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பாா்வையாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com