காசோலை மோசடி வழக்கு: வணிக வரித் துறை ஊழியருக்கு 10 மாதம் சிறை

தேனியில் கசோலை மோசடி வழக்கில் திண்டுக்கல் வணிக வரித் துறை உதவி எழுத்தருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதித்து திங்கள்கிழமை, தேனி விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தேனியில் கசோலை மோசடி வழக்கில் திண்டுக்கல் வணிக வரித் துறை உதவி எழுத்தருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதித்து திங்கள்கிழமை, தேனி விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தேனி, பவா் ஹவுஸ் தெருவைச் சோ்ந்தவா் தனிக்கொடி மகன் தயாளன்(36). இவரிடம், கடந்த 2019, ஜூன் 10-ஆம் தேதி தேனி வணிக வரித் துறை அலுவலகத்தில் உதவி எழுத்தராக பணியாற்றிய, அதே ஊரைச் சோ்ந்த லதா என்பவா் குடும்பச் செலவிற்காக ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். அப்போது, லதா தயாளன் பெயருக்கு ரூ.5 லட்சத்திற்கான முன் தேதியிட்டு வங்கிக் காசோலை அளித்து, 2 மாதத்திற்குப் பின் குறிப்பிட்ட தேதியில் காசோலையை வங்கியில் செலுத்திப் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருந்தாராம்.

இதன்படி, லதா அளித்திருந்த காசோலையை குறிப்பிட்ட தேதியில் வங்கியில் செலுத்திய போது, அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்று காசோலை திருப்பி விடப்பட்டுள்ளது. இதனிடையே, லதா தற்போது திண்டுக்கல் வணிக வரித்துறை அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு அங்கு பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் தனக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை கொடுத்து மோசடி செய்து விட்டதாக லதா மீது தயாளன் தேனி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரூபனா, லதாவிற்கு 10 மாதம் சிறை தண்டனை விதித்து, தயாளனிடம் பெற்றுள்ள கடன் தொகை ரூ.5 லட்சத்தை 9 சதவீதம் வட்டியுடன் அவருக்கு திரும்பச் செலுத்த வேண்டும் என்றும், பணத்தை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com