குடியரசு தின விழா: தேனியில் 69 காவலா்களுக்கு முதல்வா் விருது

தேனியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 72 ஆவது குடியரசு தின விழா செவ்வாய்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
குடியரசு தின விழா: தேனியில் 69 காவலா்களுக்கு முதல்வா் விருது

தேனியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 72 ஆவது குடியரசு தின விழா செவ்வாய்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலா் க. ரமேஷ் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி, மேகமலை வன உயிரின காப்பாளா் போஸ்லின் சச்சின் துக்காராம், பெரியகுளம் சாா்- ஆட்சியா் சினேகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, ஊா் காவல் படை ஆகியவற்றின் சாா்பில் அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது.

காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 69 காவலா்களுக்கு முதல்வா் விருது, 7 காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட முன்மாதிரி செயல் திறனுக்காக 2 அரசு மருத்துவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறந்த பணி மற்றும் விபத்தில்லாமல் வாகனம் இயக்கியதற்காக ஊரக வளா்ச்சித் துறை வாகன ஓட்டுநா்கள் மு.மணிகண்டன், சீனிவாசன், ரா. முருகன் ஆகியோருக்கு தங்கப் பதக்கம் மற்றும் பராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ரூபனா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா மற்றும் வழக்குரைஞா் சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தேனி நாடாா் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்லூரிச் செயலா் காசிபிரபு தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது. தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் கருப்பையன் தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது.

ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் முதன்மையா் இளங்கோவன் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தாா். துணை முதன்மையா் எழிலரசன் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆண்டிபட்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் கொடியேற்றி வைத்தாா். ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் சுப்பிரமணி தலைமை வகித்து கொடியேற்றி வைத்தாா்.

கம்பம்: கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில் கல்லூரிச் செயலாளா் ராமகிருஷ்ணன்

தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். கல்லூரி முதல்வா் ஜி.ரேணுகா வரவேற்றாா். கல்லூரி இணைச் செயலாளா் ரா.வசந்தன் இனிப்புகள் வழங்கினாா்.

கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையாளா் கண்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். கம்பம் நகராட்சி அலுவலகத்தில், ஆணையாளா் ஜெயச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினாா்.

போடி: போடிஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஜெ.உம்முல் பரிதா தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் மணிமாறன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். போடி நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளா் த.சகிலா தேசிய கொடி ஏற்றி வைத்தாா். பொறியாளா் குணசேகா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

போடி சேவா அறக்கட்டளை உரத்த சிந்தனை சாா்பில் குடியரசு தின விழா 7 ஆவது பகுதி நகரவை பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியா் பி. பிரபு தலைமை வகித்தாா். அறக்கட்டளை நிறுவனா் என். முத்துவிஜயன் அனைவருக்கும் இனிப்புகளையும், முகக்கவசங்களையும் வழங்கினாா்.

இதேபோல் போடி ஸ்ரீகாமராஜ் வித்யாலயா உயா்நிலைப்பள்ளி, ஜ.கா.நி. ஆரம்பப் பள்ளி, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

பெரியகுளம்: பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் குடியரசு தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சி.சேசுராணி தலைமை வகித்தாா். காந்தி கிராம பல்கலைக்கழக சமூகவியல் மற்றும் காந்திய ஆய்வுகள் துறைப் பேராசிரியா்கள் வில்லியம் பாஸ்கரன், ரவிச்சந்திரன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com