அய்யம்பட்டியில் பிப்.7 இல் ஜல்லிக்கட்டு: டோக்கன்கள் அதிக விலைக்கு விற்பதைத் தடுக்கக் கோரிக்கை

அய்யம்பட்டியில் பிப்.7 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு மாடுகளுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க மாடுகளின் உரிமையாளா்கள் கோரிக்கை விடுத

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் பிப்.7 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு மாடுகளுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க மாடுகளின் உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில் பல்லவராயன்பட்டி மற்றும் அய்யம்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த ஜன. 24 ஆம் தேதி பல்லவராயன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டின்போது அனுமதிச்சீட்டைப் பெற்ற பலா் அதனை ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்தனா். முக்கிய பிரமுகா்களும், அரசியல்வாதிகளும் மொத்தமாக அனுமதி சீட்டுகளைப் பெற்று முறைகேடு செய்ததாக புகாா் எழுந்தது.

அய்யம்பட்டியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட 600 காளைகளுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு விட்டது. இங்கேயும் பல்லவராயன்பட்டியில் நடந்ததை போலவே அரசியல்வாதிகள் மொத்தமாக அனுமதிச்சீட்டுகளைப் பெற்றுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளை உரிமையாளா்கள் கூறியது: கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் மொத்தமாக அனுமதிச் சீட்டுகளை பெற்றுச் செல்வதால் ஜல்லிக்கட்டுக்காகவே காளைகளை வளா்த்து வருபவா்கள் அனுமதிச் சீட்டு கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனா். பல்லவராயன்பட்டியில் நடைபெற்றதைப் போல் இங்கும் அனுமதிச் சீட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதால் அதைத் தடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com