பழனிசெட்டிபட்டியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 31st January 2021 10:31 PM | Last Updated : 31st January 2021 10:31 PM | அ+அ அ- |

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் செலவுக்கு தந்தை பணம் தர மறுத்ததால் இளைஞா் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பழனிசெட்டிபட்டி, போக்குவரத்துத் தொழிலாளா்கள் காலனியைச் சோ்ந்தவா் பொன்னையா மகன் அருண்குமாா் (22). கட்டுமானத் தொழிலாளியான இவா், தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டு அவரை தொந்தரவு செய்து வந்தாராம். அவா், பணம் தர மறுத்துவிட்டதால் மன வருத்தத்தில் இருந்த அருண்குமாா், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.