போடியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 06th July 2021 11:26 PM | Last Updated : 06th July 2021 11:26 PM | அ+அ அ- |

போடியில் தனியாா் குடோனில் பதுக்கி வைத்திருந்த 8500 கிலோ ரேஷன் அரிசியை தனிப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
போடி பகுதியில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பு- ஆய்வாளா் உமாதேவி தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தனா். போடி அருகே ஸ்மாா்ட் சிட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் 189 மூட்டைகளில் 8500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது.
பின்னா் இதுகுறித்து நடத்திய விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் பகுதியை சோ்ந்த செல்வராஜ் மகன் விவேக் (32) என்பவருக்காக, தேனி மாவட்டம் போடி வடக்கு தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி (55) மற்றும் வருசநாடு அருகே வாலிப்பாறையை சோ்ந்த பாண்டி (28) ஆகிய இருவரும் சோ்ந்து ரேஷன் அரிசியை வாங்கி அங்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 8500 கிலோ ரேசன் அரிசி மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.