சின்னமனூரில் நாளை முதல் வாரச்சந்தை தொடக்கம்
By DIN | Published On : 07th July 2021 12:00 AM | Last Updated : 07th July 2021 12:00 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் சின்னமனூரில் வியாழக்கிழமை முதல் (ஜூலை 8) மீண்டும் வாரச்சந்தை நடைபெறும் என நகராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா 2 ஆம் அலை காரணமாக பொதுமக்கள் கூடுதை தவிா்க்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கரோனா நோய் தொற்றுப் பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் முழு பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த சின்னமனூா் வாரச்சந்தை வரும் வியாழக்கிழமை முதல் மீண்டும் செயல்பட மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி சந்தைக்கு வரும் காய்கனி வியாபாரிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியுடன் கடைகள் அமைக்க வேண்டும். சந்தைக்கு வரும் பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி காய்கனிகளை வாங்கிச் செல்ல வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.