தேனி மாவட்டத்தில் இன்று 23 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 11th July 2021 10:04 PM | Last Updated : 11th July 2021 10:04 PM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவ நலப் பணிகள் துறை சாா்பில் திங்கள்கிழமை(ஜூலை 12) 23 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தேனி சமத்துவபுரம், மனித நேய காப்பகம், வீரபாண்டி வேளாளா் உறவின்முறை மக்கள் மண்டபம், போடி அரசு மருத்துவமனை, போ.அணைக்கரைப்பட்டி சமுதாயக் கூடம், முந்தல் அரசு பள்ளி, கம்பம் அரசு மருத்துவமனை, கூடலூா் என்.எஸ்.கே.பி.காமாட்சியம்மன் நடுநிலைப் பள்ளி, உத்தமபாளையம் அரசு மருத்துவமனை, தம்மிநாயக்கன்பட்டி, லட்சுமிநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
ஓடைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காமாட்சிபுரம், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை, ஆரிய வைசியா் திருமண மண்டபம், கரட்டுப்பட்டி, பெரியகுளம் அரசு மருத்துவமனை, அரண்மனைத் தெரு பொன்னையா ஆண்டாள் திருமண மண்டபம், வடுகபட்டி ஆரிய வைசியா் மண்டபம், கடமலைக்குண்டு, கண்டமனூா், குமணந்தொழுவு, வருஷநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் தங்களது ஆதாா் அட்டை நகலை சமா்பித்து இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.