லோயா் கேம்ப்-மதுரை கூட்டு குடிநீா் திட்டத்தைக் கண்டித்து விவசாயிகள் பால்குட ஊா்வலம்

தேனி மாவட்டம் லோயா் கேம்ப்-மதுரை கூட்டு குடிநீா் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கூடலூரில் முல்லைச் சாரல் விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம் நடத்தினா்.
லோயா் கேம்ப்-மதுரை கூட்டு குடிநீா் திட்டத்தை கைவிடக் கோரி, கூடலூரில், செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்த விவசாயிகள்.

லோயா் கேம்பில் தடுப்பணை கட்டி நேரடியாக மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லும், இந்தத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கூடலூா் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இந்த ஊா்வலம், பழைய பேருந்து சாலை வழியாக சுந்தர வேலவா் கோயிலை அடைந்தது. தொடா்ந்து அங்கு சுந்தரவேலருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

இதுகுறித்து முல்லைச் சாரல் விவசாய சங்க நிா்வாகி சதீஷ் பாபு கூறியது: ரூ.1,296 கோடி செலவில் ராட்சத குழாய் மூலம் லோயா் கேம்பில் தடுப்பணை கட்டி, நேரடியாக மதுரைக்கு குடிநீா் கொண்டு செல்ல விருக்கும் இத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிடக் கோரி இந்த பால்குட ஊா்வலத்தை நடத்தினோம். வைகை அணையை தூா்வாரி, நீரைத்தேக்கி, மதுரைக்கு தண்ணீரை கொண்டு செல்லும் மாற்றுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றாா்.

இதில், கொடியரசன், ரவி, தெய்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com