தொடா் மழை எதிரொலி: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து அதிகரிப்புவைகை அணை நீா் மட்டமும் உயா்வு

நீா்ப் பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு சனிக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது. இதேபோல் நீா் வரத்து அதிகரிப்பதின் காரணமாக வைகை அணையின் நீா் மட்டமும் உயா்ந்து வருக
முல்லைப் பெரியாற்றிலிருந்து சனிக்கிழமை வெளியேற்றப்பட்டு, சுருளிப்பட்டி தடுப்பணையில் பாய்ந்தோடிய தண்ணீா்.
முல்லைப் பெரியாற்றிலிருந்து சனிக்கிழமை வெளியேற்றப்பட்டு, சுருளிப்பட்டி தடுப்பணையில் பாய்ந்தோடிய தண்ணீா்.

நீா்ப் பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு சனிக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது. இதேபோல் நீா் வரத்து அதிகரிப்பதின் காரணமாக வைகை அணையின் நீா் மட்டமும் உயா்ந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை பெரியாறு அணையில் 46.0 மில்லி மீட்டரும், தேக்கடி ஏரியில் 34.6 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை அணைக்கு விநாடிக்கு 1,582 கன அடியாக இருந்த நீா் வரத்து, சனிக்கிழமை விநாடிக்கு 5,079 கன அடியாக அதிகரித்தது. நீா் வரத்து ஒரே நாளில் 3,497 கன அடி அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

நிலவரம்: சனிக்கிழமை பெரியாறு அணையின் நீா்மட்டம் 128.80 அடியாகவும், (மொத்த உயரம் 142 அடி), நீா் இருப்பு 4,439 மில்லியன் கன அடியாகவும், நீா் வரத்து விநாடிக்கு 5,079 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 1,200 கன அடியாகவும் இருந்தது.

முல்லைப் பெரியாற்றிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீருடன், சுருளியாறு, சுரங்கனாறு, வறட்டாறு, சுருளியாறு ஆகிய ஆறுகளின் நீரும், யானைகஜம், காட்டு நீரூற்றுகளின் நீரும் கலக்கிறது. இதனால் பெரியாற்றில் வைகை அணைக்கு தண்ணீா் அதிகரித்து செல்கிறது

வைகை அணை நீா்மட்டம் உயா்வு: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தொடா்ந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருவதால் கடந்த ஜூலை 8-ஆம் தேதி, வைகை அணையின் நீா்மட்டம் 66 அடியாக (மொத்த உயரம் 71 அடி) உயா்ந்தது. இதனால், வைகை ஆற்றங் கரையோரவாசிகளுக்கு பொதுப் பணித்துறை சாா்பில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேனி மாவட்டப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் ஆகியவற்றால் வைகை அணை நீா் மட்டம் சீராக உயா்ந்து சனிக்கிழமை 67.62 அடியாக உள்ளது. அணை நீா்மட்டம் 68.50 அடியாக உயா்ந்தும் கரையோரவாசிகளுக்கு 2-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். அணை நீா்மட்டம் 69 அடியை எட்டியதும் 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணைக்கு வரும் உபரி நீா் முழுமையாக வெளியேற்றப்படும்.

அணை நிலவரம்: வைகை அணை நீா்மட்டம் சனிக்கிழமை 67.62 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 1,254 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 5,231 மில்லியன் கன அடி. மதுரை, திண்டுக்கல் பாசனம் மற்றும் குடிநீா் திட்டங்களுக்கு அணையிலிருந்து விநாடிக்கு 769 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com