இருடியம் மோசடி: போடி நபரைக் கடத்தியதாக மானாமதுரையைச் சேர்ந்த 2 பேர் கைது

போடியில் இருடியம் கும்பகலசம் தருவதாக ரூ 3.5 கோடி மோசடி செய்த நபரைக் கடத்தியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கைதான இருவர்.
கைதான இருவர்.

போடியில் இருடியம் கும்பகலசம் தருவதாக ரூ 3.5 கோடி மோசடி செய்த நபரைக் கடத்தியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தபுரம் பைபாஸ் ரோட்டில் வசித்து வருபவர் தங்கமுத்து மகன் குட்டி என்ற ராஜீவ்காந்தி (39) இவரிடம் தேனி மாவட்டம் போடி தாலுகா பொட்டல்களம்  மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சஞ்சீவி மகன் கெளவுர் மோகன்தாஸ் (48) என்பவர் இரிடியம், கோபுர கும்பக் கலசம் தருவதாகக் கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு ரூ 3.5 கோடி வாங்கியுள்ளார்.

அதன் பின்னர் இவர் குட்டி என்ற ராஜீவ்காந்திக்கு இரிடியம், கோபுர கலசத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் குட்டி என்ற ராஜீவ் காந்தி இருடியம், கும்ப கலசத்தை தாருங்கள் அல்லது நான் கொடுத்த பணத்தை கொடுங்கள் என கெளவுர் மோகன்தாஸிடம் கேட்டு வந்துள்ளார்.

மீட்கப்பட்ட கெளவுர் மோகன்தாஸ்.

ஆனால் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த குட்டி என்ற ராஜீவ் காந்தி தனது நண்பர்கள், உறவினர்கள் என 10 பேருடன் கார்களில் போடி பொட்டகளம் மீனாட்சிபுரத்துக்குச் சென்று கெளவுர் மோகன்தாஸை காரில் கடத்தி கொண்டு வந்து மானாமதுரையில் தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் கெளவுர் மோகன்தாஸ் மனைவி புகார் செய்தார். அதன்பேரில் போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் மானாமதுரைக்கு வந்து இங்குள்ள போலீசார் உதவியுடன் குட்டி என்ற ராஜீவ்காந்தி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கெளவுர் மோகன்தாஸை மீட்டனர்.

இவரை கடத்திக் கொண்டு வந்து வீட்டில் அடைத்து வைத்ததாக குட்டி என்ற ராஜீவ் காந்தி மானாமதுரை அருகே கஞ்சிமடை கிராமத்தைச் சேர்ந்த சபரிமலை மகன் ராஜேந்திரன்(48) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதன்பின் மூவரையும் போலீசார் விசாரணைக்காக போடிக்கு கூட்டிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com