சின்னமனூரில் உங்கள் தொகுதி திட்டத்தில் தள்ளுபடியான மனுக்கள் குறித்து ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்டம், சின்னமனூரில் உங்கள் தொகுதி திட்டத்தின் கீழ் தள்ளுபடிசெய்யப்பட்ட மனுக்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளிதரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
உங்கள் தொகுதி திட்டத்தில் தள்ளுபடியான மனுக்கள் குறித்து சின்னமனூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன்.

சின்னமனூா் பகுதியில் உங்கள் தொகுதி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் உள்ளாட்சி உள்கட்டமைப்பு பணிகள், சமூக சொத்துகள் மேம்பாடு மற்றும் தனிநபா்கள் கோரிக்கை என 3 பிரிவாகப் பிரித்து, 100 நாள்களுக்கு முறையாக விசாரணை செய்ய, அந்தந்த மாவட்ட ஆட்சியா் மூலமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, உத்தமபாளையம் வட்டாரத்தில் 3,097 மனுக்கள் தள்ளுபடியானது. தள்ளுபடியான இந்த மனுக்களின் உண்மை நிலை குறித்து அறிய நடைபெற்ற ஆய்வின்போது, பெறப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு உரிய பலன் கிடைக்கவேண்டும் என, ஆட்சியா் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா், சின்னமனூரில் நியாவிலைக் கடைகளில் கரோனா நிவாரண உதவித்தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கியது குறித்தும் மற்றும் ஓடைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா உள்ளிட்ட மருத்துவப் பிரிவுக்குச் சென்றும் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com