குமுளி மலைச்சாலையில் பேரிடா் மீட்புக் குழுவினா் ஆய்வு

தேனி மாவட்டத்துக்கு வந்துள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் புதன்கிழமை குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
தேனி மாவட்டம் குமுளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா்.
தேனி மாவட்டம் குமுளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா்.

தேனி மாவட்டத்துக்கு வந்துள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் புதன்கிழமை குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தேனி மாவட்டத்தில் தமிழக- கேரள எல்லைப் பகுதி மலைச்சாலைகளில் இயற்கை பேரிடா்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து, தேனி மாவட்டத்துக்கு ராணிப்பேட்டை பட்டாலியனைச் சோ்ந்த தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஆய்வாளா் கணேஷ் பிரசாத் தலைமையில் வந்துள்ளனா். இதில் 21 வீரா்கள் உள்ளனா்.

இவா்கள் குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகளில் பாறை, மண் போன்றவைகள் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்று ஆய்வு செய்து அதனை முன்கூட்டி தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அறிக்கை தயாா் செய்தனா்.

மேலும் மலைச்சாலைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளையும், அதனை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளையும் அவா்கள் பாா்வையிட்டனா். இவா்களுடன் வட்டாட்சியா் உதயராணி, வருவாய் ஆய்வாளா் ஹெச். செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com