மகப்பேறு நிதி உதவித்திட்டத்தில் ஊட்டச்சத்து பரிசுப் பெட்டகம் வழங்குவது நிறுத்தம்

தேனி மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக மகப்பேறு நிதி உதவித்திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு

தேனி மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக மகப்பேறு நிதி உதவித்திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊட்டச்சத்து பரிசுப் பெட்டகம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

டாக்டா் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தின் கீழ் கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் பயன்பெறும் வகையில் இந்த ஊட்டச்சத்து பரிசுப்பெட்டகம் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த பரிசுப் பெட்டகம் சரிவர வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதாரப் பணியாளா்கள் கூறியது: கரோனா பொதுமுடக்கக் காலத்தில் 4 மற்றும் 7 மாதங்களில் வழங்கப்பட்டு வந்த ஊட்டச்சத்து பரிசுப் பெட்டகம் முழுமையாக வரவில்லை. குறைந்த அளவில் தான் வந்ததன. அதனை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பிரித்து ஒரு தவணையாவது கொடுத்து வந்தோம். ஆனால், கடந்த 5 மாதங்களாக எவ்வித ஊட்டச்சத்து பெட்டகமும் வரவில்லை. இதன் காரணமாகவே இந்த ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படவில்லை. வந்தால் அனைவருக்கும் வழங்கப்படும் என்றனா்.

எனவே, மாவட்ட சுகாதாரத்துறை இயக்குநா், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக தடையின்றி ஊட்டச்சத்து பரிசுப் பெட்டகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com