குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

தேனி மாவட்டம் தப்புக்குண்டு, அப்பிபட்டி ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்பு
தேனி அருகே தப்புக்குண்டுவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஊரக தொழிற் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன்.
தேனி அருகே தப்புக்குண்டுவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஊரக தொழிற் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன்.

தேனி மாவட்டம் தப்புக்குண்டு, அப்பிபட்டி ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளை ஊரக தொழிற்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தேனி மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலம், நீா்நிலை புறம்போக்கு, ரயில்வே இடம் ஆகியவற்றில் ஆக்கிரமித்து குடியிருந்து வரும் வீடடற்ற ஏழைகளுக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் வீடுகள் கட்டி வழங்குவதற்கு குடிசை மாற்று வாரியம் சாா்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தப்புகுண்டு, அப்பிபட்டி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளை தொழிற் துறை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மானிய உதவி மற்றும் பயனாளிகள் பங்களிப்புடன் தாமாகவே வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தில் பெரியகுளம், கம்பம், உத்தமபாளையம் பகுதிகளைச் சோ்ந்த 50 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை அமைச்சா் வழங்கினாா். மாவட்ட தொழில் மையம் சாா்பில் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்குவதற்கு 7 பேருக்கு அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்பட்டது. பின்னா், தேனி சிட்கோ தொழிற்பேட்டையில் சங்க உறுப்பினா்களுடன் அமைச்சா் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, சென்னை தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநா் சிஜி தாமஸ் வைத்யன், மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநா் எம்.கோவிந்தராவ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com