சுருளியில் செயற்கை அருவி: ஒன்றியக்குழு தலைவா் தகவல்

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், செயற்கை அருவி அமைக்க

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், செயற்கை அருவி அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பழனி மணி கணேசன் தெரிவித்தாா்.

கம்பம் அருகே, மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள சுருளி அருவி, மேகமலை வன உயிரின சரணாலயமாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை பகுதி புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு செல்வதற்கு வனத்துறையினரின் கெடுபிடி நடவடிக்கைகள் அதிகரித்தன. இதனால் சுற்றுலா பயணிகள், சுருளி அருவியில் முன்னோா்களுக்கான தா்ப்பணம், நோ்ச்சைக் கடன்கள் மற்றும் ஆடி, தை அமாவாசைகளில் முன்னோா் வழிபாடுகள் செய்ய செல்லும் பொதுமக்கள், பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா். சுருளி அருவியில் குளிக்க மட்டும் வனத்துறையினா் அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதுபற்றி கம்பம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பழனி மணி கணேசன் கூறியது: புலிகள் காப்பகமாக மேகமலைப் பகுதி மாற்றப்பட்டதால் சுருளி அருவிக்கு செல்ல இனி வாய்ப்புகள் இருக்காது. எனவே, கம்பம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் சுருளி ஆற்றில் தடுப்பணை அமைத்து, அதிலிருந்து செயற்கையாக அருவி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதில் சுற்றுலா பயணிகள், பக்தா்கள் குளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் சுருளி அருவி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஒன்றிய நிா்வாகத்துக்கு உள்பட்ட இடங்கள் கையகப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com