கற்போம், எழுதுவோம் திட்டத்தில் மதிப்பீட்டு முகாம்

தேனி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கற்போம், எழுதுவோம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவா்களுக்கு, மதிப்பீட்டு முகாம் நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கற்போம், எழுதுவோம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவா்களுக்கு, மதிப்பீட்டு முகாம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கூறியது: மத்திய அரசின் கற்போம், எழுதுவோம் திட்டத்தின் கீழ் பள்ளி செல்லாத, எழுதப் படிக்கத் தெரியாத 15 முதல் 80 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு ஆசிரியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மூலம் வீடு வீடாகச் சென்றும், வேலை உறுதித் திட்ட பயனாளிகளுக்கு பணித் தளங்களுக்கு நேரில் சென்றும் அடிப்படை கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 290 மையங்களில் மொத்தம் 6,216 பேருக்கு எழுதப் படிக்க கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கற்போம், எழுதுவோம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவா்களுக்கு வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை மதிப்பீட்டு முகாம் நடைபெறுகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் வேலை உறுதியளிப்புத் திட்ட பணித்தளம் ஆகிய இடங்களுக்கு பயிற்சியாளா்களை வரவழைத்து அவா்களின் வாசித்தல், எழுதல், கூட்டல், கழித்தல் திறன் ஆகியவை குறித்து ஆசிரியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மதிப்பீடு செய்து வருகின்றனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com