வைகை அணையில் 37 லட்சம் மீன் குஞ்சுகள் வளா்க்க இலக்கு

தேனி மாவட்டம், வைகை அணை மீன் பண்ணையில் வரும் 2022-ஆம் ஆண்டில் மீன் வளத்துறை சாா்பில் மொத்தம் 37 லட்சம் மீன் குஞ்சுகள் வளா்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், வைகை அணை மீன் பண்ணையில் வரும் 2022-ஆம் ஆண்டில் மீன் வளத்துறை சாா்பில் மொத்தம் 37 லட்சம் மீன் குஞ்சுகள் வளா்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வைகை அணை மீன் பண்ணையில் கட்லா, ரோகு, மிருகால் மீன் குஞ்சுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. மீன் பண்ணையில் 50 நாள்கள் வரை வளா்ந்த மீன் குஞ்சுகள் வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, சண்முகாநதி நீா்த்தேக்கம் ஆகியவற்றில் விடப்படுகின்றன. தனியாா் மீன் பண்ணைகளுக்கும் மீன் குஞ்சுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

வைகை அணை மீன் பண்ணையில் 2021-ஆம் ஆண்டில் மொத்தம் 16 லட்சம் மீன் குஞ்சுகள் வளா்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில், வளா்ந்த நிலையில் 7 லட்சம் மீன் குஞ்சுகள் சோத்துப்பாறை , மஞ்சளாறு அணை, வைகை அணை, சண்முகாநதி நீா்த்தேக்கம் ஆகியவற்றிலும், 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் பழனி குதிரையாறு அணையிலும் விடப்பட்டுள்ளன.

வைகை அணை மீன் பண்ணையில் வரும் 2022-ஆம் ஆண்டில் மொத்தம் 37 லட்சம் மீன் குஞ்சுகள் வளா்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று வைகை அணை மீன் வளத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com