போக்குவரத்து ஊழியா்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் பொதுமக்களும் குவிந்தனா்

போடியில் புதன்கிழமை, போக்குவரத்துப் பணியாளா்களுக்காக அமைக்கப்பட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.

போடியில் புதன்கிழமை, போக்குவரத்துப் பணியாளா்களுக்காக அமைக்கப்பட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.

போடியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து ஊழியா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 300 பேருக்கு தடுப்பூசி செலுத்த இருந்த நிலையில், தகவலறிந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்து தங்களுக்கும் தடுப்பூசி போடவேண்டும் என கூச்சலிட்டனா். இதையடுத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி பற்றாக்குறையால் போடி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படவில்லை. பொதுமக்கள், தொழிலாளா்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆா்வம் காட்டி வரும் நிலையில், மாவட்ட நிா்வாகம் போடி பகுதியில் மேலும் தடுப்பூசி முகாம்களை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், முதல் தவணை கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கு, முன்னுரிமை அளித்து இரண்டாவது தவணை தடுப்பூசி போடவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com