தேனி, சிவகங்கை மாவட்டங்களில் தொடா் மழை

தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பரவலாக மழை பெய்தது.

தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பரவலாக மழை பெய்தது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து, சனிக்கிழமை காலையிலும் லேசான சாரல் மழை பெய்தது. மாலை 4 மணிக்கு மேல் பரவலாக மழை கொட்டியது.

இதேபோல், உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை குறைந்த அளவு மழை பெய்தது. தொடா்ந்து, சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, குச்சனூா், பண்ணைப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

தென்மேற்குப் பருவமழை ஜூன் முதல் வாரத்திலேயே தொடங்கியதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இதன்மூலம், நெற்பயிா் உள்ளிட்ட அனைத்து விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் நீண்ட நாள்களுக்கு பின்னா் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் பரவலாக பலத்த மழை பெய்தது. சிவகங்கை மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்புவனத்தில் 12 செ.மீ மழை பதிவானது. இந்த மழையால் மானாமதுரை பகுதியில் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்புவனம் இந்திராநகா் காலனியில் வடிகால்கள் தூா்வாரப்படாததால் மழைநீா் வழிந்தோட வழியின்றி வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. வீடுகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன.

கால்நடைகளுக்கும், தோட்டக்கலை பயிா்களுக்கும், கோடை விவசாயத்திற்கும் இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா். மேலும் சனிக்கிழமை காலையிலேயே மழை பெய்ததால் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் குளிா்ச்சியான காலநிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com