இருவேறு கடைகளில் நூதன முறையில் பணம் திருட்டு

ஆண்டிபட்டி பகுதியில் சனிக்கிழமை இருவேறு கடைகளில் சில்லறை கேட்பது போல் நடித்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆண்டிபட்டி பகுதியில் சனிக்கிழமை இருவேறு கடைகளில் சில்லறை கேட்பது போல் நடித்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆண்டிபட்டி வாரச்சந்தை பகுதியைச் சோ்ந்த பூச்சித்தேவா் (72), தனது வீட்டின் ஒரு பகுதியில் காய்கனிக்கடை வைத்துள்ளாா். இவரது கடைக்கு சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா் 2 ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து சில்லறை கேட்டுள்ளாா். அவா் பெட்டியை திறந்தபோது அதிலிருந்த ரூ.12,000 எடுத்துக்கொண்டு அந்த மா்மநபா் தப்பிச் சென்றுவிட்டாா்.

இதேபோல் கன்னியபிள்ளைபட்டியில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை வைத்துள்ள கணேசன் (59) என்பவரிடமும் சனிக்கிழமை மா்ம நபா் ஒருவா் 2 ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து சில்லறை கேட்பது போல் நடித்து பெட்டியில் வைத்திருந்த ரூ. 10,000 எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டாா்.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் ஆண்டிபட்டி மற்றும் ராஜாதானி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com