பொதுப்ணித்துறை தாமதம்: வரத்து வாய்க்காலை பராமரித்த கூடலூர் விவசாயிகள்

கூடலூரில் நன்செய் நிலங்களுக்கு பாசன வசதி பெறும் வரத்து வாய்க்கால் புதர்மண்டி கிடந்ததால், பொதுப்பணித்துறையினர் உதவியின்றி விவசாயிகளே திங்கள்கிழமை தூர்வாரினர்.
வரத்து வாய்க்காலை பராமரித்த கூடலூர் விவசாயிகள்
வரத்து வாய்க்காலை பராமரித்த கூடலூர் விவசாயிகள்

கூடலூரில் நன்செய் நிலங்களுக்கு பாசன வசதி பெறும் வரத்து வாய்க்கால் புதர்மண்டி கிடந்ததால், பொதுப்பணித்துறையினர் உதவியின்றி விவசாயிகளே திங்கள்கிழமை தூர்வாரினர்.

தேனி மாவட்டம், கூடலூர் தாமரைக்குளம் அருகே உள்ளது சாமி வாய்க்கால், சுமார் 200 ஏக்கர் நன்செய் நிலங்களுக்கு பாசன வசதிக்காக இந்த கால்வாயில் தண்ணீர் செல்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக கடலூர் விவசாயிகள் பொதுப்பணித்துறையினரிடம் வரத்து வாய்க்காலை பராமரிக்க மனுக்கள் கொடுத்தனர், ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தண்ணீர் திறந்து விடப்பட்டு 7 நாட்களாகியும் பெரியாறு அருகே உள்ள சாமி வாய்க்காலுக்கு தண்ணீர் வரத்து வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த கூடலூர் முல்லை சாரல் விவசாயிகள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் செல்லும் வாய்க்கால் இரு கரைகளிலும் அடர்ந்த புதர் மற்றும் முள் செடிகளை அகற்றியும், தூர்வாரியும் வருகின்றனர். இதுபற்றி கூடலூர் முல்லைச்சாரல் விவசாய சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, பல்வேறு முறைகளில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகளிடம் சாமி வரத்து வாய்க்கால் தூர்வாருவதற்கு  மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 

தற்போது முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு 7  நாட்களாகியும் இன்னும் தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 800 ரூபாய் தங்களது சொந்தப் பணத்தை கொடுத்து வரத்து வாய்க்காலை தூர் வாரி வருகின்றனர் என்றார். இனியும் பொதுப்பணித்துறையினர் தாமதிக்காமல் வரத்து வாய்க்காலை தூர்வாரச் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com