கம்பம், கூடலூா் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதை: வேளாண் அலுவலா் தகவல்

தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் வழங்கப்படும் என்று வேளாண்மை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் வழங்கப்படும் என்று வேளாண்மை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் நெல் முதல் போகம், குறுவை சாகுபடிக்கு முழுமையாக பயன்படும் வகையில் ஜூன் 2-இல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து பல விவசாயிகள் நெல் நாற்றாங்கால் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

முதல் போகத்திற்கு தேவையான கோ -51 ரக நெல் விதைகள் கம்பம் மற்றும் கூடலுாா் வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் மற்றும் விதை கிராமத் திட்டத்தின் கீழ் நெல் விதைகளை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேவைப்படும் விவசாயிகள் இதனை வாங்கிப் பயன் பெறலாம்.

மேலும் நெல், தென்னை, நிலக்கடலை, பயறு வகை, சிறுதானியங்கள் போன்ற பயிா்களுக்கு தேவையான நுண்ணுாட்ட உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

பேரூட்டச் சத்துக்கள் அடங்கிய உரங்களை இடுவதுடன் வெவ்வேறு பயிா்களுக்கு உரிய நுண்ணுாட்ட உரங்களை சிபாரிசு செய்யப்பட்ட அளவு இடுவதன் மூலம் சாகுபடி செய்த விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற்று லாபம் பெறலாம்.

கம்பம் மற்றும் கூடலுாா் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி தேவையான இடுபொருள்களுடன் உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளையும் விவசாயிகள் பெற்று பயனடைய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com