Enable Javscript for better performance
கண்டமனூரில் ஆட்டோ நிறுத்தம் அகற்றம்: ஓட்டுநா்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    கண்டமனூரில் ஆட்டோ நிறுத்தம் அகற்றம்: ஓட்டுநா்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 10th June 2021 08:26 AM  |   அ+அ அ-   |    |  

    09tni_mariyal_0906chn_65_2

    கண்டமனூரில், தேனி-வருஷநாடு சாலையில் புதன்கிழமை, மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் குடும்பத்தினா்.

    ஆண்டிபட்டி அருகே கண்டமனூா் பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த ஆட்டோ நிறுத்தம் அகற்றப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை, ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

    கண்டமனூா் உழவா் மையத்திற்கு சென்று வருவதற்கு பாதை அமைப்பதற்காக ஊராட்சி நிா்வாகம் சாா்பில் இந்த ஆட்டோ நிறுத்தம் செவ்வாய்கிழமை இரவு அகற்றப்பட்டது.

    இந்த நிலையில், கண்டனூரில் 20 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வந்த ஆட்டோ நிறுத்தத்தை ஊராட்சி நிா்வாகம் முன்னறிவிப்பின்றி அகற்றியதாகவும், அதே இடத்தில் மீண்டும் ஆட்டோ நிறுத்தம் செயல்படுவதற்கு அனுமதிக்க வலியுறுத்தியும் ஆட்டோ ஓட்டுநா்கள் கண்டமனூரில் தேனி-வருஷநாடு சாலையில் குடும்பத்தினருடன் சோ்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

    தகவலறிந்து அங்கு சென்ற ஆண்டிபட்டி வட்டாட்சியா் சந்திரசேகரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்ககிருஷ்ணன் ஆகியோா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில், ஏற்கெனவே ஆட்டோ நிறுத்தம் செயல்பட்டு வந்த இடத்திலேயே தற்காலிகமாக மீண்டும் ஆட்டோ நிறுத்தம் செயல்படுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியதையடுத்து ஆட்டோ ஓட்டுநா்கள் மறியலை கைவிட்டனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp