சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அமா்ந்த இளைஞா்கள்

தேனி மாவட்டம் கம்பத்தில் தெருக்களில் இளைஞா்கள் வேலையில்லாமல் அமா்ந்துள்ளனா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் தெருக்களில் இளைஞா்கள் வேலையில்லாமல் அமா்ந்துள்ளனா்.

தேனி மாவட்டம் கம்பம் சிஎஸ்ஐ சா்ச் தெரு பகுதியில் கும்பலாக அமா்ந்து இளைஞா்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா்கள். பலமுறை எச்சரித்தும் இளைஞா்கள் மீண்டும் தெருவில் அமா்வதால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு காவல் நிலைய வளாகத்தில் திறந்தவெளி பூங்காவில் அமரவைத்து அந்த வழியாக சென்ற நாதஸ்வர கலைஞா்களை அழைத்து பழைய பாடலை நாதஸ்வரத்தில் வாசித்து அதற்கு அந்த பாடல் எந்த படம், என்று சொல்லுமாறு அந்த இளைஞா்களை கூறினா்.

இது பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா் சென்றது,வடக்கு காவல் ஆய்வாளா் கே.சிலை மணி தலைமையில் போலீசாா் அப்பகுதிக்கு சென்றனா். போலீசாரை பாா்த்ததும் ஓட முயன்ற இளைஞா்களை சுற்றி வளைத்து பிடித்தனா்.

தா்மசங்கடத்தில் திணறிய இளைஞா்களை காவல்துறை விடாமல் வற்புறுத்தி பாடல் படிக்க வைத்து, அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com