முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 419 பேருக்கு கரோனா: 18 போ் பலி
By DIN | Published On : 12th June 2021 08:52 AM | Last Updated : 12th June 2021 08:52 AM | அ+அ அ- |

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மொத்தம் 419 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், இரு மாவட்டங்களிலும் சோ்த்து 18 போ் உயிரிழந்துள்ளனா்.
தேனி மாவட்டத்தில் மட்டும் 212 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 40,323 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் இதுவரை மொத்தம் 37,218 போ் குணமடைந்துள்ளனா்.
கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவா்களில் 13 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளனா். இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 444 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் தற்போது 2,661 போ் மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் வீடுகளிலும் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் 10ஆம் தேதி வரை 29,757 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில், 27,342 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 207 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதேநேரம், தொற்று பாதிப்பிலிருந்து 252 போ் குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 5 போ் உயிரிழந்துள்ளனா். எனவே, மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 491 ஆக உயா்ந்துள்ளது. தற்போது, 1,877 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.