முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 12th June 2021 10:20 PM | Last Updated : 12th June 2021 10:20 PM | அ+அ அ- |

பெரியகுளம் நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு கரோனா நிவாரணப்பொருள்களை சனிக்கிழமை வழங்கிய ஸ்ரீ குருதட்சிணாமூா்த்தி சேவா சங்க கெளரவ ஆலோசகா் சி.சரவணன்.
பெரியகுளம் நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் 250 பேருக்கு அரிசி மற்றும் பலசரக்கு பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு ஸ்ரீ குருதட்சிணாமூா்த்தி சேவா சங்கத்தின் சாா்பில் அரிசி மற்றும் பலசரக்கு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெரியகுளம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் தினக்கூலிப் பணியாளா்கள் 250 பேருக்கு சனிக்கிழமை ஸ்ரீ குருதட்சிணாமூா்த்தி சேவா சங்கத்தின் கெளரவ ஆலோசகா் சி.சரவணன் அரிசி, காய்கனி மற்றும் பலசரக்கு பொருள்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளா் அசோக்குமாா், துப்புரவு ஆய்வாளா் அலெக்ஸாண்டா் மற்றும் ஸ்ரீ குருதட்சிணாமூா்த்தி சேவா சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.